um nalla kirupaikalal

உம் நல்ல கிருபைகளால்
Collections
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Kids Songs collection.

உம் நல்ல கிருபைகளால்
எனக்கிரங்கும் என் இயேசுவே
உம்மை மறந்து தூரமாய் போனேன்
நிம்மதி இழந்து அலைந்தேனே
என் கண்ணீரே எனக்கு உணவாகி
என் படுக்கையை கண்ணீரால் நனைக்கின்றேனே – உம் நல்ல
பாவமாம் பொல்லா கோட்டைக்குள் அடிமையானேன்
விடுவிப்பார் இல்லாமலே ஏங்குகின்றேன்
வலைக்குள் சிக்கித் தவிக்கும் மீன் போல
பொல்லா வலையில் சிக்குண்டு தவிக்கிறேனே – உம் நல்ல
யோனாப்போலவே வழிமாறி நான் சென்றேன்
தோல்விகள் என்னையே தொடர்ந்தனவே
ஐயா இரங்கும் உந்தன் கிருபையாலே
ஏற்றுக்கொள்ளும் என்னை உம் சொந்தமாய் – உம் நல்ல
உம் நல்ல கிருபைகளால் பாடல் வரிகள், Um Nalla Kirubaikalaal Lyrics