um ninaivakave irukkirathu

உம் நினைவாகவே இருக்கிறது
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் நினைவாகவே இருக்கிறது
உம் முகம் தேடியே தவிக்கிறது 2
உம்மை நினைக்கும் போதெல்லாம்
உம் சிலுவை முன்பாக தெரிகிறதே
நோக்கி பார்க்கும் போதெல்லாம்
என் சுமைகள் தானாக கரைகிறது 2
நான் என்ன தவம் செய்தேன்
நீர் என்னை நேசிக்க..
நான் என்ன தவம் செய்தேன்
நான் இன்றும் சுவாசிக்க
இயேசுவே
1. எனக்காக ஜீவன் தந்து
என் பாவங்கள் சுமந்து
நீர் செய்த அன்பை நினைக்கிறேன்
உம் அன்பில் திகைத்தே போகிறேன்
நிந்தையின் ஊரிலே
என்னையும் தேடினீர்
தூரமாய் ஓடினேன்
தேடிவந்து தாங்கினீர் – நான் என்ன
2. திராட்சைகளின் நடுவே என்னை
அத்தி மரமாக வைத்த
உம் அன்பை எண்ணிப் பார்க்கிறேன்
உம் கிருபையாலே நிற்கிறேன்
கனி ஏதும் இல்லையே
என்னையும் நேசித்தீர்
எஜமானின் கோபத்தில்
எனக்காக பேசினீர் – நான் என்ன