um pillaiyay vazhnthituven

உம் பிள்ளையாய்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் பிள்ளையாய் வாழ்ந்திடுவேன்
உம்மையே நான் ஏற்றுக்கொள்வேன்.
அதிகாரம் தந்தீர் உரிமை தந்தீர்
உம் பிள்ளையாய் வாழ்ந்திடவே.
அப்பா பிதாவே என்றழைக்க
புத்திர சுவீகாரம் எனக்குத் தந்தீர். – அதிகாரம்
பலமும் அன்பும் தெளிந்த புத்தியுள்ள
ஆவியையே எனக்குத் தந்தீர்.- அதிகாரம்
தேவ பிள்ளை என்றழைப்பதினால்
உமக்கு ஒப்பாக மாற்றிடுவீர். – அதிகாரம்
பிதாவின் அன்பில் நிலைத்திருக்க
பரிசுத்தமான வாழ்வு தந்தீர்.- அதிகாரம்
தேவ வித்து என்னில் தரித்திருக்க
ஆவி என்னும் அச்சாரம் தந்தீர்.- அதிகாரம்