um saayalilae naan thirpthiyaagirean

உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன் – Um Sayalilae Naan Thirupthiyagirean
உம் சாயலிலே நான் திருப்தியாகிறேன்
உம் சமுகத்தையே
நான் தரித்துக் கொள்கிறேன்
என் நேசரே என் இயேசுவே
நான் உம்மைத் துதிக்கிறேன்
வாழ்நாளெல்லாம் உம் நாமத்தை
நான் வாழ்த்திப் பாடுகிறேன்
நான் நடந்தாலும் படுத்திருந்தாலும்
நீர் என்னை சூழ்கிறீர்
என் முற்புறமும் என் பிற்புறமும்
என்னை நெருக்கி ஏவுகிறீர்
தேவனே என்னை ஆராய்ந்து
என் இதயத்தை அறிந்து கொள்ளும்
வேதனை உண்டாக்கும் வழியில்
நடவாமல் தினமும் நடத்திச் செல்லும்
நான் நிற்பதும் நிர்மூலமாகாதிருப்பதும்
உந்தன் கிருபையே -உம்
கிருபை என்னை நினைத்ததாலே
உயிருடன் வாழ்கிறேன்