umakkaaga umakkaaga ummakagavae

உமக்காக உமக்காக உமக்காகவே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமக்காக உமக்காக உமக்காகவே
என்னை அர்ப்பணித்தேன்-என்னையே -2
அர்ப்பணித்தேன் என்னையே (4)
காடுகள் மேடுகள் பள்ளத்தாக்கு
உமக்காக நடந்திடவே -2
வீடுகளை விட்டு பெற்றோரை விட்டு
வந்தேன் உமக்காகவே -2
தந்தையும் தாயையும் விட்டு
தாழ்விலே வந்தேனையா -2
பாதை காட்டும் தேவா
என்னை பாதையில் நடத்திடுமே
பாதை தெரியாமல் அலையும்போது
எனக்கு பாதை காட்டுமையா
ஜாதி ஜனத்தோரை விட்டு
பின்பற்றினேன் உம்மையே
பாவம் நெருங்கி சூழ்கையில்
என்னை பாதுகாத்தருளும்
சிங்கத்தின் வாயினின்று என்னை
மீட்டு இரட்சியும் ஐயா