umathu sayalay

உமது சாயலாய்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உமது சாயலாய்
என்னை பிறக்க வைத்தீரே
பிறந்த நாள் முதலாய் தூக்கி சுமந்தீரே
ஆயுள் நாட்களை பெருக செய்தீரே
ஆண்டுகள் தோறும் ஆசீர்வதித்தீரே
அன்பின் தகப்பனே நன்றி சொல்கிறேன்
உயிர் வாழும் நாளெல்லாம் உம்மை உயர்த்துவேன்
உலகம் தோன்றும் முன்னமே
கிறிஸ்துவுக்குள்ளாகவே
என்னை நீர் தெரிந்து கொண்டீரே
பிறந்த நாள் முதலாய் இந்த நாள் வரையிலும் ஆதரித்து நடத்தி வந்தீரே
தாயின் கருவில் இருந்தே
என்னை பிரித்தெடுத்தே
கிருபையினால் அழைத்துக் கொண்டீரே
உமது ஊழியம் செய்திட
பரிசுத்தமாய் வாழ்ந்திட
அபிஷேகம் செய்து விட்டீரே