ummaal koodumae ummaal

உம்மால் கூடுமே உம்மால் எல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மால் கூடுமே உம்மால் எல்லாம் நடக்குமே
நீர் சொன்னால் போதுமே எங்கள் வாழ்க்கை மாறுமே
உம் வார்த்தையில் வல்லமை உம் வார்த்தையில் ஜீவன்
என்பதை நாங்கள் அறிந்தோமே
ஓ ஓஹோ ஓ ஓஹோ. அல்லேலூயா ஆமென்
மாம்சமான யாவருக்கும் தேவனாகிய கர்த்தாவே
உம்மால் செய்ய முடியாத காரியங்கள் ஒன்றுமில்லை
நீர் சகலமும் செய்பவர் நீர் சகலமும் புதிதாக்குவீர்
ஓங்கும் புயமும் பலத்த கரத்தினால் தமது ஜனத்தை நடத்தினாரே
கொடிய பலத்த ஜாதிகளை அழித்து ஜெயத்தை கொடுத்தீரே
பரலோகத்தின் தேவனே வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்