ummai aarathikka vanchikiren

உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை ஆராதிக்க வாஞ்சிக்கிறேன்
என்னை அர்ப்பணித்து வந்து நிற்கின்றேன்
மான்கள் நீரோடை வாஞ்சிப்பது போல்
உம்மை வாஞ்சிக்கிறேன் -2
ஆராதனை துதி ஆராதனை (3)
என்றென்றும் உமக்கே சொந்தம்
1. ஜீவன் தரும் வார்த்தை உம்மிடமுண்டே
வேறெங்கு நான் செல்வேன் -2
உந்தன் பாதம் ஒன்றே எனக்கு போதுமே
அதுவே எந்தன் வாஞ்சை -2
2.உலகில் வாழும் நாட்களெல்லாம்
உம்மோடு வாழ்வதே என் பாக்கியம்
உம்மைவிட்டு என்னை பிரிக்கின்ற பாவம்
ஒருநாளும் வேண்டாமையா
3. என் விருப்பம் செய்த நாட்கள் போதும்
இனி உம் விருப்பம் தினம் செய்வேன்
உந்தன் ஆலயமே எனக்கானந்தமே
அனுதினம் வாஞ்சிக்கிறேன்
4. விண்ணை விட்டு மண்ணில் வந்தீர் எனக்காக
இரத்தம் சிந்தி என்னை மீட்டீர் உமக்காக
விண்ணில் சேர்த்திட நடு வானில் வருவீர்
ஆயத்தமாய் காத்திருப்பேன்