Ummai Aarathikkum pothellaam song lyrics

உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
உம் பிரசன்னத்தை உணருகிறேன்
உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
உம் மகிமையால் நிரம்புகிறேன்
ஆராதனை எத்தனை இன்பமானது
ஆராதனை எத்தனை இனிமையானது
உம்மை போற்றுவது உம்மை புகழ்வது
உம்மை ஆராதிப்பது எத்தனை இன்பமானது
உம்மை ஆராதிக்கும் நேரத்திலே
என் ஆவி உம்மோடு உறவாடுது-2
உம்மை ஆராதிக்கும் நேரத்திலே – என்
ஆவி அனல் மூண்டு எழும்புகின்றது -2
உம்மை ஆராதிக்கும் நேரத்திலே
என் ஆவி உம்மிலே களிகூருது -2