Ummai allamal song lyrics

உம்மை அல்லாமல்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

பிரசன்னத்தை லேசாக எடுத்தேனே
நேரத்தை வீணடிக்க ஓடினேனே -2
கிருபை மறந்து பாவம் செய்தேனே -2
கண்ணீருடன் உந்தன் பாதம் வருகிறேன் -2
உம்மை அல்லாமல் யாரிடத்தில் போவேன்
உம்மை அல்லாமல் யாரைத் தேடுவேன்-2
1. ஒருமுறை விழுந்த போதும் விட்டுவிடல
மறுமுறை விழுந்த போதும் தூக்க மறக்கல-2
விட்டுக்கொடுக்க உமக்கு மனம் இல்லையே
இனிமேலும் உம்மை நான் விடுவதில்லையே -2 – உம்மை அல்லாமல்
2. மனம் நொந்து போய் நின்ற நாட்களெல்லாம்
என்னைத் தேற்றவே இறங்கி வந்தீர் -2
சூழ்நிலைகளெல்லாம் மேற்கொள்ளப் பார்த்ததே
சூழ்நிலைகளெல்லாம் மேற்கொண்டீரே -2 – உம்மை அல்லாமல்