ummai ariya ventiya vithaththil ariyanume

உம்மை அறிய வேண்டிய விதத்தில்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை அறிய வேண்டிய விதத்தில் அறியணுமே
வேறொன்றும் எனக்கு மேன்மை இல்லையே
வாழ்ந்தாலும் உம்மோடு தாழ்ந்தாலும் உம்மோடு
எல்லா நிலையிலும் உம்மோடு தான்
பாழாய் கிடந்த எந்தன் வாழ்விலே
பதராய் போனதே என் நாட்களல்லவோ
பாசமாகவே என்னை தேடி வந்தீரே
பதறாதே என்று அணைத்து கொண்டீரே
அந்தி சந்தி மத்தியான வேளைகளிலும்
அனுதினமும் உம்மை நான் தியானிப்பேனே
நீர் தான் என் சத்தம் கேட்டதால்
உம்மிலே மகிழ்ந்து களிகூருவேன்
என் ஆத்துமாவே நீ ஏன் கலங்குகிறாய்
தேவனையே நோக்கி காத்திருப்பதால்
எந்தவித பொல்லாப்பும் நேரிடாது
வாதை உன்னை ஒருபோதும் அணுகுவதில்லை
நானே தேவனென்று அறிந்து கொள்ளுங்கள்
ஜாதிகளுக்குள்ளே உயர்ந்திருப்பேன்
சேனையின் கர்த்தர் என்னோடிருக்கிறார்
யாக்கோபின் தேவன் உயர்ந்த அடைக்கலம்
உம்மை அறிய வேண்டிய விதத்தில் பாடல் வரிகள், Ummai Ariya Vendiya Vidhathil lyrics