Ummai Nambum Manithan Naan Lyrics

உம்மை நம்பும் மனிதன்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

(பல்லவி)
உம்மை நம்பும் மனிதன் நான்
வெட்கம் அடைவதில்லை
நான் தோல்வியை காண்பதில்லை (2)
எனது உயிரே இயேசுவே
எனை ஆளும் தலைமையே (2)
என் நம்பிக்கை நீரே
எந்தன் ஆதாரம் நீரே (2)
(சரணம் 1)
திட்டங்கள் தருபவர் நீரல்லவோ
நிறைவேற்றும் காலங்கள் உன் கையிலே (2)
என் வழி எல்லாம் நீரறிவீர்
எனக்கானதை நீர் நிறைவேற்றுவீர் (2)
(சரணம் 2)
எதிரியின் முன் என்னை உயர்த்தினீர்
ராஜாக்களோடு அமர செய்தீர் (2)
நன்மையும் கிருபையும் தொடர செய்து
வாழ்நாள் எல்லாம் உம்மில் மகிழ செய்தீர் (2)
(சரணம் 3)
கைவிட்டு சென்றனர் பாதியிலே
ஏழை என்று என்னை விரட்டினாரோ (2)
கண்ணீரோடு நான் விதைத்ததெல்லாம்
கம்பீரத்தோடு அவர் அறுக்க செய்வார் (2)
(மீண்டும் பல்லவி)
உம்மை நம்பும் மனிதன் நான்…
நான் தோல்வியை காண்பதில்லை…
எனது உயிரே இயேசுவே
எனை ஆளும் தலைமையே (2)
என் நம்பிக்கை நீரே
எந்தன் ஆதாரம் நீரே