ummai paadiduven naan

உம்மையே பாடிடுவேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையே பாடிடுவேன்
நான் உம்மையே பாடிடுவேன் -2
உம்மைப் பாடி உம்மைப் போற்றி(2)
உம்மைப் பாடி போற்றியே
உம்மையே புகழ்வேன்
1. பாவங்களிலும் அக்கிரமங்களிலும் மரித்துப் போயிருந்தேன்
பாவம் ஏற்று மரித்து உயிர்த்து ஜீவன் எனக்களித்தீர் -2
நித்திய ஜீவன் அளிப்பேன் என்று
எனக்கு வாக்களித்த நித்தியரே
உம் கிருபையை நினைத்து நித்தமும் துதித்திடுவேன்
நீரே மீட்பர் நீரே இரட்சகர் நீரே என் தேவன்
2. ஜீவன் எனக்கு கொடுத்ததாலும்
அன்பை நான் அறிந்தேன்
ஜீவனோடு எழுந்ததால் நான்
நீதிமானானேன்-கிறிஸ்து எனக்கு
ஜீவனானார் மரணம் ஆதாயம்
கிருபை நினைத்து ஜீவ பலியாய்
தந்து தொழுதிடுவேன் - நீரே மீட்பர்
நீரே இரட்சகர் நீரே என் தேவன்