Ummai Paadum Neramellaam

உம்மை பாடும் நேரமெல்லாம்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை பாடும் நேரமெல்லாம் என்னுள்ளம் மகிழுதையா
உம்மை துதிக்கும் நேரமெல்லாம் என் இதயம் சிலிர்க்குதையா – 2
தாய் போல் என்னை நீர் தாலாட்டினீர்
அன்பு தந்தையாய் என்னை தாங்கினீர்
தாகத்தோடு என் நாவு வறண்டபோது
வற்றா ஜீவத் தண்ணீர் எனக்கு தந்தீர் – 2
தேவன்தாம் செய்த நன்மைகட்காய்
என்னுள்ளம் துதிக்குதையா -2
பாவத்தின் பாரத்தில் நான் தவித்த போது
என்னைத் தேடி வந்து இரட்சித்தீரையா
பெலனற்று பலவீனனா இருந்தேன்
உந்தன் பெலன் தந்து தூக்கியெடுத்தீர் – 2
தேவன்தாம் செய்த நன்மைகட்காய்
என்னுள்ளம் துதிக்குதையா -2
வழி தப்பி அலைந்தேன் உம்மை மறந்தேன்
என்னை மறவாத தெய்வம் நீரே
சத்தியத்தை அறியும் அறிவைத் தந்தீர்
அந்த சத்தியத்தால் விடுவித்தீரே – 2
தேவன்தாம் செய்த நன்மைகட்காய்
என்னுள்ளம் துதிக்குதையா -2