Ummai Pola Maaranum

உம்மைப்போல மாறனும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மைப்போல மாறனும், உம்மைப்போல வாழனும்,
உம்மில் இன்னும் அதிகமாய் அன்பு கூறணும்
உலகின் அன்பு மாயை என்று அறிந்தேன், உறவின் அன்பு நிரந்தரம் இல்லை உணர்ந்தேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் சொந்தமே
நீர் ஒருவரே என் வாழ்வின் செல்வமே
உமது சாயலை நான் பிரதிபலிப்பேன் உந்தனின் கிருபையால் நான் நித்தம் வாழுவேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் விளம்பரம்,நீர் ஒருவரே என் வாழ்வின் நிரந்தரம்
உந்தனின் சேவையில் நான் நிலைத்திருப்பேன் உந்தனின் வருகைக்காக காத்திருப்பேன்
நீர் ஒருவரே என் வாழ்வின் ஏக்கம், நீர் ஒருவரே என் வாழ்வின் ஊக்கம்