Ummai Theadi Vanthean

உம்மைத்தேடிவந்தேன்சுமைதீருமம்மா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Ave Maria, Mother Mary Songs and Roman Catholic Songs collection.

உம்மைத் தேடி வந்தேன் சுமை தீருமம்மா
உலகாளும் தாயே அருள்தாருமம்மா – 2
1.முடமான மகனை நடமாட வைத்தாய்
கடல்மீது தவித்த கப்பலைக் காத்தாய் (2)
பால்கொண்ட கலசம் பொங்கிடச் செய்தாய் – 2
பொருள்கொண்ட சீமான் உன்பாதம் சேர்த்தாய் – 2
2.கடல்நீரும் கூட உன் கோயில் காண
அலையாக வந்து உன் பாதம் சேரும் (2)
அருள்தேடி நாங்கள் உன் பாதம் பணிந்தோம் – 2
அன்பாகி எமக்கு அருள் தாருமம்மா – 2