Ummai Uyarthuvathae En Ullaththin Vaanjai song lyrics

உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மை உயர்த்துவதே என் உள்ளத்தின் வாஞ்சை ஐயா
உமக்காய் வாழுவதே என் இதயத்தின் ஏக்கம் ஐயா – 2
நீர் செய்த நன்மைகள் ஆயிரம்
அதை எண்ணி எண்ணி பாடுவேன்
நீர் தந்த வாழ்க்கை பேரின்பம்
அதை எண்ணி எண்ணி உயர்த்துவேன்
துதித்தலுடனே உம் சந்நிதியில் வருகிறோம்
சங்கீதங்களாலே ஆர்ப்பரித்து பாடுவோம் – 2
கர்த்தரே நீர் பெரியவர்
வானங்களிலும் நீர் உயர்ந்தவர் – 2
உலகம் தோன்றும் முன் இருந்தவர்
சகலதையும் உருவாக்கினவர் – 2
நீர் இருந்தவர், இருப்பவர், முடிவு இல்லாதவர் – 2
வானங்கள் உம் சிங்காசனம் – இந்த
பூமியும் உந்தன் பாதப்படி – 2
சர்வ லோகமும் பணிந்திடும்
சகல சிருஷ்டியின் நாயகனே – 2
நீர் அதிசயர்,அற்புதர் ,சர்வ வல்லவர் – 2
“தாய் போல தேற்றி” Thai Pola Thetri | Tamil Christian Lyrics song in Tamil | # jmcreations
1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya