ummaiyae nambi vandhaenae anbai

உம்மையே நம்பி வந்தேனே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மையே நம்பி வந்தேனே
உம் அன்பை ஏங்கி வந்தேனே
உம்மை நம்பினோர் என்றும்
கைவிட படுவதில்லையே
உம் அன்பை அறிந்தவர் என்றும்
உம்மை விடுவதில்லையே
இயேசுவே உம்மை நம்புவேன்
இயேசுவே உம்மை நேசிப்பேன்
உம்மையே தேடி வந்தேனே
உம் மேன்மை அறிந்து வந்தேனே
உம்மை தேடினோர் என்றும்
உம்மை கண்டடைவாரே
உம் மேன்மை அறிந்தவர் என்றும்
உம்மை துதித்திடுவாரே
உம்மை நம்பினோர் என்றும்
கைவிட படுவதில்லையே
உம் அன்பை அறிந்தவர் என்றும்
உம்மை விடுவதில்லையே
இயேசுவே உம்மை தேடுவேன்
இயேசுவே உம்மை துதிப்பேன்