Ummal Koodum Ellam Koodum Lyrics

உம்மால் கூடும் எல்லாம் கூடும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

தேவரீர் சகலத்தையும் புதிதாக்குகிறீர்
நீ செய்ய நினைத்தது தடைபடவில்லை
அது உம்மால் கூடும் எல்லாம் கூடும்
இந்த உலக வாழ்வில் உம் அன்பே போதும்
1.தள்ளப்பட்ட கல்லாய் இருந்தேன்
மூலைக்குத் தலைக்கல்லாய் மாற்றினீரே
உடைந்த பாத்திரம் போல் உதவாது இருந்தேன்
உன் கையில் வடித்து என்னை உயர்த்தி வைத்தீரே
உள்ளங்கையில் வரைந்து விட்டீரே என் இயேசுவே
உமக்காகத் தெரிந்து கொண்டீரே – அது உம்மால் கூடும்
2.குழியில் தள்ளின என்னை
கை கொடுத்து தூக்கி எடுத்தீரே
ராஜாக்களோடும் பிரபுக்களோடும்
உயர்த்தி வைத்தீரே அழகு பார்த்தீரே
அரியணை ஏற்றிவிட்டீரே என் இயேசுவே
அரசனாய் மாற்றிவிட்டீரே – அது உம்மால் கூடும்
3.அனாதையைப் போல அலைந்தேன்
ஆதரவாய் வாழ்வில் வந்தீரே
அன்பில்லா உலகத்திலே அடைக்கலமானீரே
நிலையில்லா உலகத்திலே நிரந்தரமானீரே
எப்போதும் என்னோடு இருப்பீர் என் இயேசுவே
எனக்காக வழக்காடுவீர் – அது உம்மால் கூடும்