Ummodu Naan Irruindhaal

உம்மோடு நான் இருந்தால்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உம்மோடு நான் இருந்தால்
தாழ்ச்சி அடையேனே
உம்மையே நான் சார்ந்தால்
என்றென்றும் வாழ்ந்திடுவேன்
அல்லேலூயா
1.மரண இருளின் பள்ளத்தாக்கில்
நடந்தால் பயமில்லையே
உமது கோலும் தடியும் என்னை
என்றென்றும் தேற்றிடுமே
2.ஜீவனுள்ள நாளெல்லாம்
கிருபை தொடர்ந்திடுமே
உமது வீட்டில் என்றென்றும்
தங்கி வாசம் செய்வேன்
3.சத்துரு முன்பாக பந்தி ஒன்றை
ஆயத்தம் செய்திடுவீர்
எனது தலையை எண்ணையால்
செய்வீர் அபிஷேகம்
கர்த்தர் மேய்ப்பர் எந்தன் மேய்ப்பர்
தாழ்ச்சி அடையேனே