unakkena enaiththaruven unpani seythituven – 2

உனக்கென எனைத்தருவேன் உன்பணி
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உனக்கென எனைத்தருவேன் உன்பணி செய்திடுவேன் – 2
உறவாட வந்தவா உலகாள வந்தவா உயிராகி நின்றவா உயிரையே தந்தவா- 2
உனக்கே எனைத்தருவேன் உனைப்போல்
மாறிடுவேன் – இன்று -2
1. வாழ்வு தந்தாய் வாழ வைத்தாய் வளங்கள் தந்தாய் வளர செய்தாய் நிம்மதி தந்தாய் நிறைய செய்தாய்
செழுமை தந்தாய் முழுமை செய்தாய்
பிறரன்பு பணியே வாழ்வாக்கி சேவை செய்ய வழிகாட்டிச் சென்ற இறையன்பே என்றும் பேரன்பே திறந்த மனமும் சிறந்த குணமும் நான் தருவேன் நிறைந்த மகிழ்வும் மிகுந்த நலமும் நான் பெறுவேன்
2. மாண்பு தந்தாய் மலர செய்தாய் மதிப்பு தந்தாய் மகிழ செய்தாய் உறவு தந்தாய் உணர செய்தாய்
உறுதி தந்தாய் உயர செய்தாய்
தன்னையே பலியாய் படைத்திங்கு தரணியோர் வாழ வழி செய்த தியாகத் திருவுருவே அன்பின் நிரந்தரமே தூய உள்ளம் எளிய இதயம் நான் தருவேன் உருகும் உள்ளம் கனிந்த இதயம் நான் பெறுவேன்
உனக்கென எனைத்தருவேன் உன்பணி பாடல் வரிகள், Unakkena Enaitharuvean Unpani Lyrics