Undhan Madiyinil Thavalnthida

உந்தன் மடியினில் தவழ்ந்திட

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

Undhan Madiyinil Thavalnthida – உந்தன் மடியினில் தவழ்ந்திட
உந்தன் மடியினில் தவழ்ந்திட ஆசையையா
உந்தன் மகனாய் வளர்ந்திட வேண்டுமையா
என் இதயம் உமக்காய் துடிக்கனுமே
என் உயிரும் உமக்காய் உருகனுமே
கிருபை தரணும் கிருபை தரணும் – 2
மனிதனின் அன்பு வேண்டாமையா
என்றும் மாறாத உந்தன் அன்பு போதுமையா
இந்த உலகத்தை மறந்து வாழனுமே
தினம் உமக்காய் காத்திருந்து ஏங்குனேன்
கிருபை தரணும் கிருபை தரணும் – 2
ஆவியிலே நிரம்பி ஜெபிக்கவுமே
உந்தன் அநாதி சிநேகத்தால் அணைக்கனுமே
அந்தகார வல்லமையை அழிக்கணுமே
உந்தன் அற்புதங்கள் ஒன்றாவது செய்யணுமே
கிருபை தரணும் கிருபை தரணும் – 2
சத்தியத்தை சுமந்து செல்லனுமே
உந்தன் சமாதானம் உலகெங்கும் நிலைக்கனுமே
அந்த சத்துருவை சாட்டையாலே அடிக்கணும்
அவன் ராஜ்யத்தை வேரோடு அழிக்கணுமே
கிருபை தரணும் கிருபை தரணும் – 2