Unga Anbuku Naan Adimai

உங்க அன்புக்கு நான் அடிமை

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லைன்னா நான் வெறுமை
அன்பே (2) என்னை அரவணைத்த அன்பே
அன்பே (2) என்னை தாங்கின அழகன்பே
சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில்
என்னைத் தாங்கின அழகன்பே
நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம்
என்னை விட்டு விலகாத அன்பே
எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஊழியம் தந்தவரே
உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்