Unga Pilla Naan Vanthirukkirean song lyrics

உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க பிள்ளை நான் வந்திருக்கிறேன்-4
நீங்க நினையாத தூரம் போனேன்
இந்த ஒரு விசை மன்னியுங்கப்பா -2 – உங்க பிள்ளை
1.உம்மை விட்டு நான் தூரம் போனேன்
பாவ முள்ளில் நான் சிக்கிக் கொண்டேன் -2
சுற்றிலும் உங்கள தேடினேப்பா
கண் எட்டும் தூரத்தில் நின்னீங்கப்பா -2 – நீங்க நினையாத
2.உம் சித்தம் இல்லாமல் போனேன் அப்பா
உயர் வாழ்வு உண்டென்று மறந்தேன் அப்பா -2
என் வாழ்வில் உம் சித்தம் நிறைவேறிட
உம் சேவை செய்ய நான் துணிந்தேன் அப்பா-2 – நீங்க நினையாத
3.கால்கள் வழுவாமல் காத்தீங்கப்பா
தனிமை உணராமல் சுமந்தீங்கப்பா -2
ஒவ்வொரு நாட்களும் கூட வந்தீர்
ஒவ்வொரு நிமிடமும் சுமந்து கொண்டீர் -2 – நீங்க நினையாத