ungka anpai pata oru varththai illai

உங்க அன்பை பாட
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க அன்பை பாட ஒரு வார்த்தை இல்லை
உங்க நேசத்தை நான் என்ன சொல்ல – 2
எல்லை இல்லா அன்பினால் அழைத்தவரே
கள்ளம் இல்லா அன்பினால் கவர்ந்தவரே
புறம்பே தள்ளாத நேசரே – 2
1. அன்பாய் அணைக்கும் தாயும் நீரே
ஆறுதல் அளிக்கும் தகப்பனும் நீரே – 2
2. வழித்தப்பிபோனேன் ஒரு ஆட்டை போல
தேடி வந்தீர் நல்ல மேய்ப்பனாக – 2
3. என்னை மீட்க சிலுவை சுமந்தீர்
அழைத்து செல்ல சீக்கிரம் வருவீர் – 2