ungka kirupaiyal uyir vazhkiren

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் இன்னும் நான் சுவாசிக்கிறேன்
கிருபை கிருபை பெரிதான கிருபை
கிருபை கிருபை நித்திய கிருபை
என் கிருபை உனக்கு போதும் என்று வாக்கு தந்தவரே
உம் கரத்தின் நிழலில் என்னை மூடி பாதுகாத்தவரே
என் மீது கண்ணை வைத்து ஆலோசனை சொல்பவரே
உன்னை விட்டு விலகுவதில்லை என்று வாக்கு தந்தவரே
நான் போகும் இடங்களுக்கெல்லாம் என்னோடு வந்தவரே
தனிமையில் இருந்த போதும் துணையாக நின்றவரே
தகுதி அற்ற என்னையும் தயவாக நினைப்பவரே
தாயை போல தந்தையை போல அன்பு காட்டி அணைப்பவரே
மனிதர்கள் மறந்தாலும் என் நினைவாய் இருப்பவரே