ungka koota iruppathuthan enakku santhoosham

உங்க கூட இருப்பதுதான்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க கூட இருப்பதுதான் எனக்கு சந்தோஷம்
உங்க கூட நடப்பதுதான் எனக்கு ஆனந்தம்
உங்கள பாடுவதுதான் எனக்கு சங்கீதம்
உங்க கூட வாழ்வதுதான் எனக்கு பாக்கியம்
என் பாசமுள்ள இயேசையா
உங்க நேசம் எனக்கு போதுமையா
உங்கள போல நானும் மாறனும்
உங்கள போல நானும் வாழனும்
1.உம்மை நானும் மறந்த போது
என்னை உம் நினைவில் கொண்டவரே
தூரமாய் போன எனக்கு துணையாய்
வந்து சேர்த்துக் கொண்டவரே
2.பாவ பாரத்தால் களைத்தபோது
பாச கரங்கொண்டு அணைத்தீரே
பாவியை தள்ளாத நேசராய் என்னை
பத்திரமாய் நடத்தினீரே