ungka vetham enakku makizhssiyaka illathirunthal thukkam ennai eppozhuthoo azhiththirukkum

உங்க வேதம் எனக்கு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்க வேதம் எனக்கு மகிழ்ச்சியாக இல்லாதிருந்தால் துக்கம் என்னை எப்பொழுதோ அழித்திருக்கும்
உங்க கிருபை மட்டும் உங்க கிருபை மட்டும் கிடைக்காமல் போயிருந்தால் என் வாழ்க்கை என்றோ முடிவுக்கு வந்திருக்கும்
நீங்க இல்லாத வாழ்க்கையை நினைத்து பார்க்கிறேன்
நிம்மதி இன்றி தவித்ததை எண்ணி பார்க்கிறேன்
அந்த வேளையில் தான் அப்பா என்னை தேடி வந்தீங்க மன காயமெல்லாம் நீங்கும் படி அன்பை தந்தீங்க
வேதனையின் உச்சத்தில் கலங்கி போய் நான் இருந்தேன் காயப்பட்ட என் இதயம் கதறி துடித்ததே
அழுது அழுது கண்ணீரெல்லாம் தீர்ந்து போனதே ஆதரவின்றி உள்ளமெல்லாம் உடைந்து போனதே
விரக்தியின் எல்லையில் நொந்து போய் நான் கிடந்தேன் உதாசீனப் படுத்தப்பட்டு என் மனம் புண்பட்டதே
புலம்பி புலம்பி வாழ்க்கையே வெறுத்துப்போனதே
சொந்த பந்தம் எல்லாமே விலகி போனதே
சிறிய வயது முதல் கவலையில் நான் வாழ்ந்தேன்
அவமானம் நிந்தைகளே நித்தமும் உணவானதே
ஏமாற்றம் ஏமாற்றம் தொடர்கதையானதே
விடியும் என்ற நம்பிக்கையே இழந்து போனேனே