ungkal iruthayam kalangkalamoo

உங்கள் இருதயம் கலங்கலாமோ

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உங்கள் இருதயம் கலங்கலாமோ
உன்னத தேவன் உன் அருகினிலே
திகையாதே கலங்காதே என்று
உன்னை சூழ்ந்து நிற்கும்
இயேசுவை நோக்கிச் சென்றிடு
சரணங்கள்
யோனாவைப் போல நீ தப்பிப் போனாலும்
நகோமியைப் போல நீ வெறுமையானாலும் (2)
அன்பு கரம் நீட்டி அழைக்கிறார் உன்னையே (2)
ஆசீர்வதிக்கவே நிற்கிறார் அருகினிலே (2). – உங்கள்
2.மன்னன் தாவீதைப் போல தவறிப் போனாலும்
சிம்சோனை போல நீ சிறுமையானாலும் (2)
நீதிமான் ஏழு தரம் விழுந்தாலும் எழுந்திடுவான் (2)
என்ற உந்தன் ஆண்டவரின் வாக்கை நீ மறவாதே (2) – உங்கள்