unmaiyai ummai nesikka

உண்மையாய் உம்மை நேசிக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையாய் உம்மை நேசிக்க
என் சுபாவத்தை மாற்றும்
உண்மையாய் உம்மை சேவிக்க
என் சுயத்தை மாற்றும் -2
உம் இரத்தத்தால் கழுவி விடும்
உம் சித்தத்தால் என்னை நிரப்பும்
உம் சத்தத்தால் என்னோடு பேசும்
துதி கீதத்தால் என் உள்ளம் நிரப்பும்
என் உள்ளம் நீரப்பும் என் உள்ளம் நிரப்பும்
என் இயேசு இரட்சகா
1. பொல்லாதவர்கள் மேலுள்ள
என் எரிச்சலை மாற்றும்
பகைமை கசப்புகளெல்லாம்
என்னை விட்டொழியச் செய்யும்
என் மேன்மை பாராட்டுகள்
உம் பிரியமாய் மாறட்டும்
என் வாயின் வார்த்தைகள்
உம் புகழையே பேசட்டும்
3. என்னில் நான் அன்பு வைப்பது போல்
எல்லோர் மேலும் நான் வைக்கணுமே
உம் சித்தம் என் வாழ்க்கையில்
முழுமையாய் நிறைவேறணுமே