Unmaiyum Kirubaiyum Ullavar

உண்மையும் கிருபையும் உள்ளவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உண்மையும் கிருபையும் உள்ளவர்
வேற்றுமையின் நிழல் இல்லையே
பாவியான என்னை மீட்க
இவ்வுலகம் வந்தீர்
கிருபையால் மீட்டு கொண்டீரே(2)
கை தட்டி உம்மை பாடுவேன்
கரம் உயர்த்தி ஆராதிப்பேன்
உம் கிருபை என் வாழ்வில் போதுமே(2)
உம் கிருபை போதுமே(3) எந்நாளுமே
உம் கிருபை போதுமே(3) என் வாழ்விலே
1.உம் அன்பிற்கு இணை இல்லையே
உம் கரம் குருகவில்லையே
உம் கரம் நீட்டி என்னை ஆசீர்வதித்தீர்
என்னையும் உம் பிள்ளையாய் மாற்றினீர்(2)-கை தட்டி
2.வாக்கில் என்றும் மாறிடாதவர்
சொன்னதை செய்து முடிப்பவர்
கரம் பிடித்து என்னை என்றும் நடத்தி செல்வீர்
கன்மலை மேல் உயர்த்திடுவீர்(2)-கை தட்டி
உண்மையும் கிருபையும் உள்ளவர் பாடல் வரிகள், Unmaiyum kirubaiyum ullavar lyrics