Unnai Athisayam Kaanach Seyvaen

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the New Year Songs collection.

உன்னை அதிசயம் காணச் செய்வேன்
நீ அற்புதம் கண்டிடுவாய் (2)
இன்று வாக்களித்தார் தேவன்
இன்று நிறைவேற்ற வந்து விட்டார்(2) – உன்னை
1. வழிதிறக்கும் அதிசயம் நடந்திடுமே
செங்கடலும் திறந்தே வழிவிடுமே (2)
தடைகளெல்லாம் தகர்ந்தே போகுமே
இடைஞ்சலெல்லாம் இன்றே மறைந்திடுமே(2) – உன்னை
2. குறைகளெல்லாம் நிறைவாகும் அதிசயமே
இறைமகனாம் இயெசுவால் நடந்திடுமே(2)
வாதையெல்லாம் மறைந்தே போகுமே
பாதையெல்லாம் நெய்யாய் பொழிந்திடுமே (2) – உன்னை
3. வழிநடத்தும் அதிசயம் நடந்திடுமே
காரிருளில் பேரொளி வீசிடுமே(2)
வனாந்திரமே வழியாய் வந்தாலும்
வல்லவரின் கரமே நடத்திடுமே (2) – உன்னை
4.சத்துருவை மேற்கொள்ளும் அதிசயமே
நிச்சயமாய் இன்றே நடந்திடுமே
கர்த்தர் நின்றே யுத்தம் செய்வாரே
உனக்கெதிரான ஆயுதம் வாய்க்காதே