Unnai Visaripavar

உன்னை விசாரிப்பவர்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னை விசாரிப்பவர் மனிதன் அல்ல
உன்னை விசாரிப்பவர் உன் தகப்பன்
1. ஒரு நாளும் போஷிக்க மறவாதவர் அவரே
ஒரு நாளும் உன்னை நடத்த தவராதவர் அவரே
கண்ணின் மணிபோல காத்திடுவார் உனையே – 2
வலக்கரம் தாங்கி நடத்திடுவார்
நற்பாதையில் நடத்திடுவார்
2. மனிதர்கள் மாறினாலும் மாறாதவர் அவரே
தேற்றிட யாருமின்றி தனிமையின் தவிப்போ
மலைகள் பெயர்ந்தாளும் அவர் கிருபை மாறாதே – 2
தாங்கி நடத்த தகப்பன் உண்டு
துயரம் நீக்கிடுவார்
3. கவலையை மறந்துவிடு கர்த்தர் கைவிடாரே
உன் கண்ணிரை மாற்றம் செய்வார்
தம் உயர்ந்த ஞானத்தாலே
தோள்களின் மேலே தூக்கி சுமந்துதிடுவார் – 2
உன்னை அணைக்க தயங்காதவர்
அன்பினால் நடத்திடுவார்