Unnatharye Lyrics

உன்னதரே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னதரே உன்னதரே
உம்மிடத்தில் வந்தேனே
என்னை நான் உமக்கு தந்தேனே
இயேசுவே இயேசுவே -2
பாதத்தில் அமர்ந்து நான் வார்த்தைகளை
கேட்டுக்கொள்வேன்
ஆசீர்வாதம் நிரப்பி என்னை துதிக்க வைத்த
தேவன் நீரே -2
உம்மை போல ஒருவர் இல்லை
துதிக்கு பாத்திரரே நீர் ஒருவரே -2
உன்னதரே எந்தன் இயேசுவே
உம்மை மகிழ்ந்து நானும் துதித்திடுவேன் -2
கரம் பிடித்து நடத்தி செல்லும்
பாதைகளை காண செய்யும்
கரம் பிடித்து என்னை நடத்தி செல்லும்
பாதைகளே காண செய்யும்
வானத்தின் மேலான தகப்பன் நீரல்லோ
அன்புக்கு மாறாத தெய்வம் நீரல்லோ -2 – உன்னதரே
கரடும் மேடுமான வாழ்க்கை மாற்றினீரே
செம்மையான வாழ்க்கை எனக்கு தந்தந்தீரே-2
உன்னதரே உம்மை நான் போற்றி பாடுவேன்
இரட்சகரே உம்மை வணங்கி பாடுவேன் -2 உன்னதரே