unnathaththile thevanukku makimai

விண் தூதர் பண்ணோடு பாட
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Christmas Songs collection.

உன்னதத்திலே தேவனுக்கு மகிமை
இன்னிலத்திலே சமாதானம்
மனிதர்மேல் பிரியமும் உண்டாவதாக
விண் தூதர் பண்ணோடு பாட
மண்மீது மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
விண் தூதர் பண்ணோடு பாட
மண்மீது மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
இனிப்பான நற்செய்தி உலகிற்கு அளித்தீர்
இம்மானுவேலாகி எனை மீட்க வந்தீர்
இத்தரைமீது ஏழையைத் தேடி
பெத்தலையிலே பிறந்தீரே மகவாய்
விண் தூதர் பண்ணோடு பாட
மண்மீது மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா
கந்தை அணிந்தீர் நிந்தைகள் சகித்தீர்
மந்தையின் மேய்ப்பருக்கு விந்தையாய் பிறந்தீர்
தந்தை மகனை ஈவாக அளித்தார்
எந்தையே உம் அன்பை எப்படி புகழ்வேன்
விண் தூதர் பண்ணோடு பாட
மண்மீது மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
மாமன்னன் பிறந்தார்
விண் தூதர் பண்ணோடு பாட பாடல் வரிகள், Vin Thoothar Pannodu Pada Lyrics