unnile nan vaiththa azhaippu oru nalum

தேவ அழைப்பு
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உன்னிலே நான் வைத்த அழைப்பு ஒரு நாளும்
வெறுமையாய் திரும்பாதே
உன் தேவன் நான் அல்லவா
என் மகன் நீ அல்லவா
ஒரு நாளும் உன்னை மறவேனே
நான் உன் பெலனாய் நிற்கையிலே
யார் உன்னை மேற்கொள்ள கூடும்
உன் பேரில் நான் கொண்ட நினைவுகள்
யாவையும் சுகந்தரிக்க செய்வேன்
1.உனக்கிருக்கும் பெலத்துடன் எனக்காய் வாழ்ந்திடு
உன் குறைவை பாராமல் என் நிறைவை பார்த்திடு
புயல் காற்று அடித்தாலும் உன் படகு மூழ்காதே
பரியாச சொற்களெல்லாம் உன்னை நிறுத்த இயலாது
உன்னக்குள் தேசம் மகிழ்ந்திருக்கும்
2.உறவுகள் மறந்தாலும் நான் உன்னை மறப்பெனோ
சொன்னதை செய்யும் அளவுக்கு உன்னை கைவிடுவேனோ
ஏளனம் செய்தவர் முன்னே உன் உயர்வை காண செய்வேன்
என் வல்ல கரங்களினாலே உன்னை மேன்மை படுத்துவேன் குறைவின்றி நிறைவுடன் வாழச்செய்வேன்
உலகத்தின் முடிவுப்பரியந்தம் உன்னோடு நான் இருப்பேன் கலங்காதே திகையாதே உன் தேவன் நான் அல்லவா
தேவ அழைப்பு பாடல் வரிகள், Deva Azhaippu lyrics