unthan aaviye suvami – Unthan Aaviyae Swami

உந்தன் ஆவியே சுவாமி

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் ஆவியே சுவாமி – Unthan Aaviyae Swami
பல்லவி
உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .
சரணங்கள்
1.முந்து மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன்
2.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்
3.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன்
4.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன்
5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்