Unthan Namathai Uyarthum Lyrics

உந்தன் நாமத்தை உயர்த்தும்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தன் நாமத்தை உயர்த்தும் போதெல்லாம்
என் உள்ளம் மகிழுதையா
கண்கள் மூடி நான் காணும் காட்சியில்
உம் முகமே தெரியுதையா-2
என் இயேசையா என் இயேசையா
என் உள்ளம் உம்மை நினைத்து பாடுது
என் இயேசையா என் இயேசையா
என் உள்ளம் உம்மை அழைத்தே தேடுது
என்னோடு நீர் உம்மோடு நான்
வாழ்ந்தால் போதுமையா-2
1). ஒருவரும் சேரா ஒளியிலே வாசம் செய்பவரே
எவரிலும் பிரகாசிக்கும் வெளிச்சத்தை உடையவரே -2
2). அக்கினி நடுவில் வாசம் செய்யும் அன்பின் ஆண்டவரே
அழிந்திடும் என் ஆத்துமாவை இரட்சித்திட வாருமே -2
3). துதிகளின் மத்தியில் வாசம் செய்யும்
ஆவியானவரே துதித்து நான் பாடிட
கிருபையை தாருமையா – 2