unthanukkaakavae uyir

உந்தனுக்காகவே உயிர்வாழத்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உந்தனுக்காகவே உயிர்வாழத் துடிக்கிறேன்
என் உயிர் இயேசுவே என் இதயம் கவர்ந்தவரே
1. மாயையான சிற்றின்பம் என்னை தொட முடியாது
மயக்கும் உலக இச்சைகளும் என்னை என்றும் அனுகாது வேதத்தை இதயத்தில் என்றும் நான் வைத்திடுவேன்
வெற்றி மேல் வெற்றிதனை நாள்தோறும் பெற்றிடுவேன்
2. அக்கினியின் சோதனைகள் என்னிடத்தில் நெறுங்காது
சீறிவரும் சிங்கங்கள் என்னை ஒன்றும் செய்யாது
விசுவாசம் நம்பிக்கை உறுதியுடன் வாழ்ந்திடுவேன்
வல்லவராம் உந்தனையே உலகிற்கு காட்டிடுவேன்
3. பாடுகளின் பாதையிலே பரவசமாய் பாடிடுவேன்
கேடு வரும் வேளையிலே கிருபைகளை தொடர்ந்திடுவேன் சிலுவைகளை அனுதினமும் சுமந்து நான் பின்செல்வேன்
சின்னவனாம் என்னையுமே உயர்வாக வைத்தவரே