Urudhiyanadhu Lyrics

உறுதியானது

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

குடு குடு குடு பெட்டிய குடு
சார் குடுங்க சார் வந்தா
வந்த இடம் போனா போன இடமா
வண்டில ஏருங்க பிரண்ட்ல உட்காருற
இப்ப என்ன ஆச்சுன்னு ரெண்டு பேரும் உம்முன்னு இருக்கீங்க
நம்ம இங்கேயே இருக்கலாம்னு நினைச்சேன்
இங்கதான் கலமிட்டீங்க
இங்க ரெண்டு நாளைக்குதான் இருக்க முடியும்
பெர்மனண்டாலாம் இருக்கவே முடியாது.
அப்படின்னா நம்ம வீடுதான் பெர்மனன்ட்டா
வீடு கூட கொஞ்ச நாள்தான்.
ஆனா அதுவும் நிரந்தரம் கிடையாது நிலைச்சு நிக்காது.
அப்போ இது இன்னைக்கு சாயங்காலமே வாடிரும்.
அப்போ இது நாளைக்கு காலையிலயே உடைஞ்சிரும்.
அப்போ இது அப்போ இது
கோல்டு சில்வர், டைமண்ட், வானம், பூமி,
சல், மூன், ஸ்டார், ஓஷன், பெஸ்ட் பிரண்ட்,
தாத்தா, பாட்டி, டாடி
எதுக்குதான் இப்படி பண்ணுவீங்க?
இதுக்குதான் பண்ணுவேன்
உறுதியானது உங்க வசனம் மட்டும்தான்
இறுதியானது உங்க வாக்கு மட்டும்தான் -2
எதுவுமே எதுமே நிலையில்லாத உலகில்
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதையா -2
உங்க வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதையா
பொன்னும் பொருளும் குறைஞ்சு போகுதே
சொந்தம் பந்தம் உற்றார் உறவு மறைஞ்சு போகுதே
சரீர பலன் தளந்து போகுதே
சிங்காரமும் சௌந்தரியமும் அழிஞ்சு போகுதே
சொத்து சுகம் எதுவும் இங்க நிரந்தரம் இல்ல
சேர்த்து வச்ச எதையும் எடுத்து போக முடியல
எண்ணங்களும் சிந்தைகளும் மாறும் தன்னால
ஆக மொத்தம் எதுவும்இந்த உலகில் நிலைக்கல
வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதே ஐயா
உங்க வார்த்தை மட்டும் நிலைச்சு நிக்குதையா – உறுதியானது