uthavathavan nan uthavathavan theva siththam

உதவாதவன் நான்
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உதவாதவன் நான் உதவாதவன் தேவ சித்தம்
எதுவென்று தெரியாதவன் – 2
என் மீது அன்பு வைத்தீர் எதற்கு ஐயா
இதற்க்கு ஈடாக எதை நான் செய்வேன் ஐயா – 2
உம் பாசத்தால் என்னை இழுத்தவரே
உம் மார்போடு தினம் என்னை அணைப்பவரே – 2
நான் வாழும் வாழ்க்கையின் பாவங்களை
தூக்கி எறிய மனதில்லையே – 2
ஆனாலும் என்மீது அன்பு வைத்து
என்னை முற்றிலும் உமக்காக தெரிந்துகொண்டீர் – 2
எனக்கு விரோதமாய் எழும்பினார்கள்
என்னை நிர்மூலமாக்கிட நினைத்தார்கள் – 2
உம் வார்த்தையினால் என்னை தப்புவித்தீர்
உம் சித்த பாதையில் நடக்க செய்தீர் – 2
உம் பெரிதான இரட்சிப்பை எனக்கு தந்து
உம் ஊழியம் செய்திட கிருபையும் தந்து – 2
உமக்காக நீர் என்னை பிரித்தெடுத்தீர்
உம் மகிமையினால் என்னை நடத்துகிறீர் – 2