uyir vazhum natkal ellam iyesayya umaippoorrip patituven – en ( 2 )

உயிர் வாழும் நாட்கள்

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிர் வாழும் நாட்கள் எல்லாம் இயேசய்யா உமைப்போற்றிப் பாடிடுவேன் – என் ( 2 )
வானமும் பூமியும் அதில் உள்ள யாவையும் படைத்தது எனக்காக இயேசய்யா படைத்தது எனக்காக
( என் உயிர் வாழும்…)
கருவினில் தூக்கி கறைகளை நீக்கி கழுவி நீர் நிறுத்தினீரே இயேசய்யா பாவத்தைப் போக்கினீரே இயேசய்யா பாவத்தைப் போக்கினீரே
அபிஷேகம் செய்து ஆவியை தந்து சேர்த்தீரே தகப்பனோடு இயேசைய்யா பரலோக தகப்பனோடு இயேசைய்யா பரலோக தகப்பனோடு….
( என் உயிர் வாழும் )
கிருபையை தந்து வரங்களை ஈந்து உயிரோடு கலந்தீரையா இயேசய்யா உறவாக இணைந்தீரைய்யா இயேசய்யா உறவாக இணைந்தீரைய்யா
ஊழியம் தந்து உதவிகள் செய்து வாழவைத்தீரைய்யா இயேசய்யா புது வாழ்வு தந்தீரைய்யா இயேசய்யா புது வாழ்வு தந்தீரைய்யா
( என் உயிர் வாழும்)