Uyiraga Neer Irukka song lyrics

உயிராக நீர் இருக்க

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

உயிராக நீர் இருக்க
உலகில் என்ன கவலை அப்பா
உலகமும் அதின் நிறைவும்
உம் சொந்தம் தானையா
உழக்குத்தான் எவ்வளவு அன்பு
என்னையும் நேசித்தீரே -2
என்னையும் ஆற்றினீரே ஐயா
நிலையில்லா இவ்வுலகில்
நிதம் தேவை உம் கிருபை
நீரன்றி இவ்வாழ்வில்
நிம்மதி தான் ஏதையா
குயவனே உம் கரத்தில்
களிமண்ணாய் தருகின்றேன்
உடைத்து உருவாக்கிடுமே
உந்தன் பாண்டமாக்கிடுமே
உந்தன் ஆவியினால் உருவாக்கிடுமே
என்னை உருவாக்கிடுமே ஐயா
தென்றலாக வாழ்விருந்தால்
தேடோமே உம் முகத்தை
தேவைகள் இருப்பதினால்
தேவா உம்மை நாடுகிறோம்
என்ன தான் நேர்ந்தாலும்
எதுவும் என்னை வீழ்த்தாது
எனக்கொருவர் இருப்பதினால்
மேற்கொண்டு ஜெயமெடுப்பேன்
நீர் வரும்போது நான் உருமாற
என்னை உருவாக்கிடுமே ஐயா