uyirukkul uyirana en iyesuve – Uyirukkul Uyiraana En Yesuvae

உயிருக்குள் உயிரான என் இயேசுவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Roman Catholic Songs collection.

உயிருக்குள் உயிரான என் இயேசுவே – Uyirukkul Uyiraana En Yesuvae
பாடல் வரிகள் – திருவிருந்துப் பாடல்
ஆ…. ஆ.… ஆ….
உயிருக்குள் உயிரான என் இயேசுவே – 2
உன்னோடு நான் வாழ வெகு ஆசையே – 2
என் உள்ள உணர்வெல்லாம் நீ தானே அறிவாய்
என் உள்ளே உன் பாசம் சுவசமாக்குவாய்
1. உயிர் வாழும் வாழ்வு அழகானது – அதை
உனக்காக வாழ்வது அர்த்தமானது – 2
உன் வாக்கை உலகெல்லாம் வாழ்வாக்கவே
உன் உயிரின் உணவு எனக்கு… என்றும் வழியாகுமே
ஆ…. ஆ.… ஆ…. ஆ…. ஆ…
லால லலலல….
2. அகம் தேடும் ஆனந்த அருள் ஊற்று நீ
என் அகம் புகுந்து ஆட்கொள்ளும் உயிர் காற்று நீ – 2
அன்பதனால் என் வாழ்வு அசைவாகவே
உன் அன்பின் உணவு என்னைச் சேர நீயாகினேன்
ஆ…. ஆ…. ஆ…. ஆ…. ஆ..