va neesap pavi va – Vaa Neesa Paavi Vaa

வா நீசப் பாவி வா

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வா நீசப் பாவி வா – Vaa Neesa Paavi Vaa
1.வா! நீசப் பாவி! வா,
என்றென்னைக் கூப்பிட்டீர்
என் தோஷம் தீர இரட்சகா!
சுத்தாங்கம் பண்ணுவீர்
அருள் நாயகா!
நம்பி வந்தேனே
தூய திரு இரத்தத்தால்
சுத்தாங்கம் பண்ணுமேன்.
2.சீர் கெட்ட பாவி நான்,
என் நீதி கந்தையே;
என்றாலும் உமதருளால்
துர்க்குணம் மாறுமே.
3. மெய்ப் பக்தி பூரணம்
தேவாவியால் உண்டாம்;
உள்ளான சமாதானமும்
நற்சீறும் பெறலாம்.
4. உண்டான நன்மையை
விருத்தியாக்குவீர்
இப்பாவகுணத் தன்மையை
நிக்ரம் பண்ணுவீர்.
5. ஆ! தூய இரத்தமே!
ஆ! அருள் நாயகா!
ஆ! கிருபா விசேஷமே!
ஆ! லோக இரட்சகா!