Vaana Nagarathin Meanmaiyena

வான நகரதின் மேன்மையென

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வான நகரதின் மேன்மையென சொலுவோம் கன
வலன் நலவருக்கருள்
சரணங்கள்
1.பானொளி ரத்னங்கள் அஸ்திபாரமாந் திருவாசல்கள்
பன்னிரு முத்துகள் தெரு பொன்னின்மயமே
தேனிலும் மதுரம் தெளிவிற் பளிங்க தான ஆறும்
ஜீவ தருவும் இருக்கும் செப்பரும் அழகதான – வான
2.அங்கு நோய் துன்பம் விசாரம் அக்ரமம் கண்ணீர் தரித்திரம்
அற்பமுமிருப்பதில்லை சொற்பமாகிலும்
பொங்கியேமுச்சத்துருக்கள் போரினுக்கிழுப்பதில்லை
புண்ணியனார் சொன்னதிரு உன்னத எருசலையாம் – வான
3.அந்நதர்க் குடிகள் வெண்மையான அலங்காரமான
அர்ச்சய உடுப்பு சிரமானதிற் கிரீடம்
மன்னவர் போலே அணிந்து மகிமையி னாசனத்தில்
வாய்மையாக வீற்றிருப்பர் தூய்மையான அந்த நல் – வான
4.நேய முற்பிதாக்கள் தீர்க்கர் நின்மலனப் அப்போஸ்தலர்கள்
நீதிமான்கள் எல்லவரும் தூதர் நல்லோரும்
ஓய்வதின்றித் தோத்ர கீத உச்சிதத் தொனிமுழக்கி
உன்னதனைப் போற்றுவார்கள் பன்னரும் சிறப்பதுள்ள- வான