Vaarunga En Nesarae vayalvelikku song lyrics

வாருங்க என் நேசரே
Written / sung by

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாருங்க என் நேசரே
வயல்வெளிக்குப் போவோம்
அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை
உமக்குக் கனியாய் கொடுப்பேன் (2)
ஆராதனையில் கலந்து கொள்வேன்
அபிஷேகத்தால் நிறைந்திடுவேன் (2)
உம்மை துதித்து துதித்து தினம் பாடி பாடி
தினம் நடனமாடி மகிழ்வேன் (2)
நேசத்தால் சோகமானேன்
உம் நேசத்தால் நெகிழ்ந்து போனேன்
உம் அன்புக் கடலிலே தினமும்
மூழ்கியே நீந்தி நீந்தி மகிழ்வேன்
நீர் செய்த நன்மைகட்காய்
என்ன நான் செலுத்திடுவேன்
இரட்சிப்பின் பாத்திரத்தை
என் கையில் ஏந்தி
இரட்சகா உம்மை தொழுவேன்