vaazhvin oliye vazhikattum

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாழ்வின் ஒளியே வழிகாட்டும் துணையே
ஒவ்வொரு நாளும் காப்பவரே
வழியும் சத்தியமும் ஜீவனுமானவரே
வாழ்நாள் முழுதும் ஆராதிப்பேன்
ஓசன்னா ஓசன்னா அல்லேலூயா
தாவீதின் மைந்தனுக்கு சரணம் ஐயா -2
1. வானில் பறக்கும் பறவைகளெல்லாம்
விதைப்பதும் இல்லை-வண்ண மலர்கள்
உடைகளுக்காக நூற்பதும் இல்லை
அவைகளை பிழைப்பூட்டும் தேவன் நீரே
என்னை அருமையாய் நடத்திடும் யேகோவாயீரே -2
2. வானங்கள் உமது மகிமையை கூறும்
உந்தன் புகழ் பாடும் வல்லமை நிறைந்த உம்
திரு வசனம் கண்களை தெளிவாக்கும்
இயேசுவே மெய்யான திராட்ச செடி
நல்ல கனிகள் தந்திட அவரே வழி