vakku sonna iyesu vekam vanthituvare

வாக்கு சொன்ன இயேசு

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish).

வாக்கு சொன்ன இயேசு வேகம் வந்திடுவாரே
விசுவாசித்த நானும் அவர் கூட செல்லுவேன்
கஷ்ட நஷ்ட வேதனையில் வாக்கு சொன்னாரே
ஆசை வைத்த வீட்டுக்குன்னை கொண்டு செல்வேன் நான்
கொஞ்சமும் பயம் வேண்டாம் நீ என் பிள்ளை தானே
ஆசையோடு என்றும் உன்னை பார்த்திடுவேன் நான்
இவ்வுலகில் சகிக்கும் லேசான சங்கடம்
அளவில்லா ஆசீர்வாதம் பெற்றுக் கொள்ளவே
கஷ்டத்திற்கு பதிலாக பிரதிபலனும்
ஜீவ கிரீடமும் பரலோகில் கிடைக்கும்
சீயோன் நாதர் தம் பிள்ளைகள் கண்ணீர் துடைப்பார்
சந்துருவின் உபத்திரவங்கள் ஒன்றும் வாய்க்காதே
நேசர் அன்பு வளையத்தில் காத்துக் கொள்வாரே
நன்றியோடவர் பாதம் முத்துவேன் நான் அந்நாளில்
அன்பு நேசர் அழகினில் பரிபூரணர்
பரலோகத்தின் அழகை விட மேலானவரே
சாரோனின் பள்ளத்தாக்கில் லீலி புஷ்பமவர்
உலகில் யாருக்கும் வர்ணிக்க முடியாதே அவரை
ஆயிரம் பதினாயிரங்களிலும் சிறந்தோர்
உலக அழகுகள் ஒன்றுமே துல்யமாகாதே
முத்து ரத்தினங்களை விட அழகுள்ளவராம்
எந்தன் நேசர் வெண்மையும் சிவப்புமானவர்