Valamudan Valkagavae Lyrics

வளமுடன் வாழ்கவே
Collections

Tamil Christian song lyrics in Tamil script and English letters (Tanglish), from the Wedding Songs collection.

வளமுடன் வாழ்கவே வளமுடன் வாழ்கவே (2)
வாழ்க… வளர்க…
குறைவுகள் ஏதுமின்றி வாழியவே…நீவீர் -2
உன் அலங்கத்திற்குள்ளே சமாதானமும் -2
உன் அரண்மனைக்குள்ளே ஆரோக்கியமும்
உண்டாவதாக… உண்டாவதாக… -2
இயேசுவின் நாமத்தில் உங்களை ஆசீர்வதித்திடுவோம் -2
1. கர்த்தர் உங்களையும் சந்ததியினரையும் பெருகப்பண்ணிடுவார் பெரியோர் சிறியோர் பணிபுரிவோரையும் ஆசீர்வதித்திடுவார் -2 எல்லாத் தீமைக்கும் விலக்கி காத்திடுவார் -2
வலது பக்கத்திலே நிழலாயிருந்து என்றும் காத்திடுவார் -2
2. உங்கள் பூமி தன் பலனைத் தந்திடும் எல்லைகள் விரிவாகும் எதிரிகள் மடங்கி ஓடிடுவார் வெற்றி உன் வசமாகும் சீயோனின் தேவனாலே செல்வங்கள் பெருகிடும் நன்மை கிருபை உன்னை தொடர்ந்திடுமே நீடித்து வாழ்ந்திருப்பாய்
3. கர்த்தர் உங்களது போக்கையும் வரத்தையும் – இது முதல் காத்திடுவார் கால்கள் தள்ளாட விட மட்டார் கரங்களில் ஏந்திடுவார் – காத்திடும் தேவன் என்றும் உறங்கிட மாட்டார். துயரம் இனி உன்னைத் தொடராது தூயவர் துணையிருப்பார் வாழ்க நீவீர் செழித்து வளர்க நீடூழி வாழ்க